நொதிப்பு உணவுகளில் உள்ள சிறு வாழூண் கல்லீரலில் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் பித்தநீரை உபயோகித்து விடும். ஆகவே பித்த நீரை உற்பத்தி செய்ய கொலஸ்ட்ரால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல்  இயல்பாக இருக்கும். இதனால் தான் அசைவ பிரியாணியுடன் தயிர் பச்சடியும், இறைச்சி உணவுகளுடன் மோரும் அருந்துவதல் அவசியம். பொதுவாக கொலஸ்ட்ரால் அடங்கிய உணவுகளுடன் நொதிப்பு உணவுகள் அல்லது பானங்களை எடுத்துக் கொள்வது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும். தயிர் மற்றும் மோர் உண்பவர்களுக்கு பித்தக் கல் மற்றும் இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அரிதாகி போகும்.