உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளை குறைக்கவும் சில உணவுகள் உதவுகின்றன. அவற்றின் தொகுப்பு இது.
1.அப்பிள்🍎 :
ஆப்பிளில் நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவை மூச்சுத்திணறலை தடுக்கக்கூடிய ஆற்றலையும் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆப்பிளில் வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளன. ஆன்டிஆக்சிடென்டுகளும் நிரம்பியுள்ளன. அவை நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ரத்தத்தை ஒழுங்குபடுத்தவும் செய்கின்றன.

2. வால்நட்ஸ்:
இவை நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. நுரையீரல் கோளாறுகள் மற்றும் சுவாசக் கோளாறுகளை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதில் அதிக அளவில் உள்ளன. மேலும் நுரையீரலில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டவை. மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற பிரச் சினைகளை குறைக்கும் தன்மையும் கொண்டது, வால்நட்ஸ்.

3.ப்ரோக்கோலி🥦:
இதனை பலர் விரும்பாமல் இருக்கலாம். ஆனால் இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை சிறந்த சுவாச திறனைப் பெற உதவி செய்யும். நுரையீரல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவும். வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள், போலேட், பைட்டோ கெமிக்கல்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ப்ரோக்கோலியில் உள்ளடங்கியுள்ளன.இவை அனைத்தும் நுரையீரலில் உள்ள சேதமடைந்த திசுக்களை மீட்டெடுக்க உதவுகின்றன. மேலும் ப்ரோக்கோலியில்                               எல்-சல்போராபேன் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மரபணுக்களை கொண்டவை. இந்த மரபணுக்கள் சுவாச பிரச்சினைகளை தவிர்க்கும். மூச்சுத் திணறலையும் போக்க துணைபுரியும்.

4.இஞ்சி:
அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இது, பல்வேறு உணவு பொருட்களில் சேர்க்கப்படுகிறது. சுவாச செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க இஞ்சி பரவலாகபயன்படுத்தப்படுகிறது. மேலும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. அவை நுரையீரலில் மாசுக்கள் பரவுவதைத் தடுக்கின்றன.
நச்சுத்தன்மையை அகற்றவும், நுரையீரலுக்கு செல்ல உதவும் காற்று துளைகளை திறக்கவும் உதவுகின்றன. மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளை போக்குகின்றன. இஞ்சி டீ பருகலாம். இஞ்சியை சாலட்களில் சேர்த்தும் சாப்பிடலாம். சமைக்கும் உணவு பொருட்களில் தவறாமல் இஞ்சியை பயன் படுத்தி வரலாம்.

5. ஆளி விதைகள்:
இவை நுரையீரலுக்கு ஆரோக்கியம் சேர்ப்பவை. நுரையீரல் திசுக்களை பாதுகாக்கக் கூடியவை. மூச்சுத் திணறலை போக்கவும் ஆளி விதைகளை உபயோகிக்கலாம். ஆளிவிதைகள் உள்ளடங்கிய உணவு நுரையீரல் பிரச்சினைகளை கணிசமாக குறைக்கும் என்பது.
ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

6.தண்ணீர்:
நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் பருகுவது மூச்சு திணறலுடன் தொடர்புடையது. ஏனெனில் நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் தண்ணீருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. நுரையீரல் உலர்வடைந்தால் வீக்கம் உண்டாகும். எனவே தினமும் குறைந்தது 6-8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. மூச்சுத் திணறல் ஏற்படுவதையும் தடுக்கிறது.

7. மஞ்சள்:
மஞ்சளில் உள்ள குர்குமின் சேர்மங்கள், கொரோனா வைரசால் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை போக்க உதவுகின்றன. நுரையீரலுக்கு செல்லும் காற்றுப் பாதையை மேம்படுத்துவதோடு, மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளை போக்குகின்றன. மஞ்சளை உணவில் பல வழிகளில் சேர்க்கலாம். இருப்பினும் மஞ்சள் கலந்த பால் பருகுவது சிறந்தது.

8.. பூண்டு🧄:
இதில் உள்ள பிளவனாய்டுகள் குளுதாதயோன் உற்பத்திக்கு காரணமாகின்றன. இது நுரையீரலை பாதிக்கக்கூடிய நச்சுகளை அகற்ற உதவும். புற்றுநோயையும் தடுக்கும். தினசரி உணவில் பூண்டு சேர்த்தால் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். இதனால் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளையும் குறைக்கலாம்.