மனிதன் உலகில்ஜீவிக்கத் தொடங்கிய காலங்களில் இயற்கையில் கிடைத்த உணவினை பற்றி ஏதும் அறியாமல் உண்டான். பிறகு காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியின் மூலம் அறிவுபூர்வமாக சிந்தித்து உணவினை தேர்ந்தெடுத்து உண்ணத் தொடங்கினான். நம் நாட்டில் முக்கிய மாக பெரிய தானியமாக பாரம்பரிய அரிசியையும் சிறுதானிய அரிசிகளான தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற நார்ச்சத்து அடங்கிய அரிசி வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவித்து உண்டு நோய் எதிரிப்புச்சக்தி உடையவர்களாய் வாழ்ந்தார்கள், வடிகஞ்சி, பழைய சோறு, கேழ்வரகு களி, உளுத்தங்களி போன்ற சத்தான உணவு வகைகளும், கடின உடல் உழைப்பும் உடல் நலத்தை நிலைநிறுத்தின.
கடலை உருண்டை, பொரி உருண்டை, எள் உருண்டை இஞ்சி மொரபா, வெல்லப்பாகு கொண்டு தயாரிக்கப்பட்ட புளிப்பு மிட்டாய், ஆரஞ்சுமிட்டாய் போன்ற பாரம்பரிய நொறுக்குத்தீனிகள் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருந்தது, நம் மூதாதையர்கள் அறிவியலை கரைத்துக் குடித்தவர்கள் இல்லை. ஆனால் இன்றைய நவீன மக்கள் ஏட்டுச்சுவடியின் மூலம் அறிவியலின் அறிவை விரல் நுனியில் வைத்திருந்தாலும், உடலின் அறிவியலை அறியத் தவறியவர்களாக இருக்கின்றனர். இதனால் உணவு வியாபாரமானது. எளிதாக பாரம்பரிய உணவுக் கலாசாரம் காலப்போக்கில் மாற்றி அமைக்கப்பட்டது. விளம்பரம், ஆயுதமாக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியத் தை சீர்குலைக்கும் உணவுகள் அவர்களின் மனதை ஈர்க்கச் செய்து உண்ணவைக்கின்றது.
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்தைக் கொண்டநம் பாட்டன், பூட்டு களுக்கு முதுமைத்தான் பிரச்னை. முதுமையினால் தான் இறந்தார்கள். இவர்கள் வாழ்ந்த சிறுசிறு கிராமங்களிலும் பாரம்பரிய உணவுகள் விடைப்பெற்றது.
பன்னாட்டுத் திண்பண்டங்கள் பாலித்தின் பைகளில் விற்பனைக்காக தொடங்கவிடப்பட்டு உள்ளது. அதிகளவு உப்பு, மசாலாப் பொருட்கள், டால்டா ஆரோக்கியமற்ற எண்ணெய் வகைகள், வெள்ளை சர்க்கரை போன்றவற்றில் தயாரிக்கப்படும் உணவு வகை களை வயது வித்யாசம் இல்லாமல் உண்ண ப்பட்டு ஆரோக்கியம் கெடுத்துக் கொள்ளப்படுகிறது, அவர்கள் அறியாமல் செய்யும் தவறு என்பது விளங்குகிறது. ஆனால் நாம் அறியாமல் செய்யும் தவறு என்று மக்கள் அறிய முற்படுவது எப்பொழுது என்பது ஆயிரம் கேள்வி ஆகும். உணவின் உண்மை மற்றும் உண்மையான உணவுகள் பற்றி மக்கள் அறிந்து ஆகவேண்டிய காலம் இது.
ஆரோக்கியத் தை ஒரு பொழுதும் பணம் கொடுத்து வாங்க முடியாது. மாற்றாக நோய்களை வாங்கி, மருத்துவச் செலவிற்காக பணத்தை விரைய மாக்கலாம். ஆனால் நோய் முழுமையாக அகலாது. இன்று புண்ணி யம் தேடி கோவிலுக்குச் செல்லும் மக்கள் கூட்டத் தைவிட மருத்துவமனையில் பலியாக, நோய் தீராதா என்று ஏக்கத்துடன் காத்துக் கிடக்கும் கூட்டமே அதிகமாக உள்ளது. ஒரு சிறு மருத்துவ மனையைக் கூட மக்கள் கூட்டம் இல்லாமல் பார்ப்பது அரிதாகிவிட்டது. காரணம் இன்று நாம் உண்ணும் உணவில் அடங்கி இருக்கும் செயற்கை பொருள்களே. இயற்கை வகையான உணவின் மவுசு குறைந்து செயற்கை உணவுகளின் சு வைக்கு இன்று மக்கள் அடிமையாகிப் போனதும் ஆகும். பாரம்பரிய உணவு காலத்தின் சாட்சியாக மட்டுமே உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
முற்காலத்தில் இந்தியா இயற்கை வளத்தில் பணக்கார நாடாகவும் மக்கள் ஏழையாகவும் இருந்தார்கள். ஆனால் இன்று இந்தியா இயற்கை வளத்தில் ஏழை நாடாகவும் மக்கள் பணக்காரர்களாக இருக்கக்காரணம் இயற்கையை அழித்து செயற்கை வளங்களை உற்பத்திச் செய்து வியாபாரத்தின் மூலம் பணம் ஈட்டுவதே ஆகும்.
இயற்கை வளமற்ற நிலத்தில் செயற்கை முறையில் உற்பத்திச்செய்யப்படும் உணவுப் பொருட்க ளில் மேலும் வேதிப்பொருட்களை செலுத்தி, முற்றிலும் சுகாதாரமற்ற உணவாக மாற்றியமைக்கப் பட்டுள்ளதை தான் மக்கள் பெரும்பாலும் உண்டு பலநோய்களின் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மேலும் மக்கள் இவற்றின் சுவைக்கு அடிப்பணிந்து இருப்பது நிலைமையை மேன்மேலும் மோசமாக்கி உள்ளது. அவற்றில் அடங்கி உள்ள நிறமிகள், ருசியூட்டிகள், பதப்படுத்தப்பட உபயோகிக்கப்படும் வேதிப்பொருள்கள், மூக்கினைத்து ளைக்கும் வாசமூட்டிகள் போன்ற நச்சுப் பொருட்களின் மாபெரும் உபயோகம் மக்களின் ஆரோக்கியத்தை அலட்சியப் படுத்தப்படுவதாக உள்ளது. அவர்களின் ஆயுட்காலமும் குறைந்து வருகின்றது. இன்றைய மக்களின் ஆயுட்காலம் ஐம்பது ஆண்டு காலங்களே என்று நிர்ணயிக்க ப்பட்டு உள்ளது. அப்படியானால் பின்வரும் சந்ததியினர்களின் ஆயுட்காலம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
ஆகவே உணவில் எச்சரிக்கையை எச்சரிக்கையாகக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நிலையில் இன்று நாம் இருக்கின்றோம் என்பதனை மக்கள் அறிய வேண்டும். அதற்கு அறிவோம் உணவின் உண்மையை முழுமையாக, நல்லதா அல்லது கெட்டதா என்று! பாரம்பரிய உணவின் உற்பத்திக்கு வித்திடுவோம். நம்மாழ்வார் போன்ற வேளாண் தலைவர்களின் சொல்லிற்கு மதிப்புக் கொடுத்து இயற்கை முறை யில் பயிர்களை உற்பத்தி செய்து, வளமான நலக்கூறுகள் அடங்கிய உணவினை வாழும்வரை உண்டு நோயில்லா வாழ்க்கையை நீண்ட ஆயுளுடன் நீடிக்கச் செய்வோம். உணவில் புரிதல் என்பது செம்மையாக இருக்கும் பட்சத்தில் உடலும் ஆரோக்கியம் நிறைந்து நீடிக்கும் என்பது உறுதி.
விதி எப்படியோ மதியும் அப்படியே
உணவு எப்படியோ உடலும் அப்படியே
இந்த நூல் உருவாக எனக்கு ஊக்கமளித்த என் கணவர் S.கருணாகரன் அவர்களுக்கும் என் பெற்றோர்கள் L.S.பாலச்சந்தர் – B.சுசீலா அவர்களுக்கும் கோவிந்தன் அண்ணன் அவர்களுக்கும் என் தம்பி L.B.தியாகராஜன், என் மருமகன் T. சுரேஷ், என் மகள் S. நித்யா, என் மகன் K. சத்யா ஆகியோருக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.